காணும் பொங்கல் விழாவையொட்டி இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தர்மபுரி
தரர்மபுரி:
பொங்கல் பண்டிகையின் 4-வது நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று அதிகாலை முதல் மதியம் வரை ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. தர்மபுரி நகரில் உள்ள மீன் மார்க்கெட் மற்றும் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் நேற்று அதிகாலை 4 மணி முதல் விற்பனை சூடு பிடித்தது. ஆடு இறைச்சி கிலோ ரூ.700 முதல் ரூ.750 வரையிலும், பிராய்லர் கோழி இறைச்சி கிலோ ரூ.200 முதல் ரூ.240 வரையிலும், நாட்டுக்கோழி இறைச்சி கிலோ ரூ.450-க்கும் விற்பனையானது. இதே போன்று மீன் ரகத்துக்கு ஏற்றார் போல் ரூ.180 முதல் ரூ.1,000 வரை விற்பனையானது.
Next Story