உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: 4 நாட்கள் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்: 4 நாட்கள் மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றி 5 கி.மீ தொலைவிற்குள் அமைந்துள்ள மதுபான கடைகளை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 9-ந் தேதி நள்ளிரவு 12.00 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி மற்றும் அந்த பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் உள்ள இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூடவேண்டும்.
இந்த 4 நாட்களில் மதுபான கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.