வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ராமலிங்க வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த மது விற்பனை கூடங்கள், உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மது கூடங்கள், முன்னாள் படைவீரர் மது விற்பனை கூடம் ஆகியவை அனைத்தையும் மதுபானங்கள் விற்பனையின்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. இதை மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story