சாலை பணி மந்தமாக நடைபெறுவதை கண்டித்துவிக்கிரவாண்டியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்வர்த்தகர்கள் அறிவிப்பு


சாலை பணி மந்தமாக நடைபெறுவதை கண்டித்துவிக்கிரவாண்டியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம்வர்த்தகர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணி மந்தமாக நடைபெறுவதை கண்டித்து விக்கிரவாண்டியில் 3-ந்தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வர்த்தகர்கள் அறிவித்துள்ளனா்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டியில் வர்த்தகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க அமைப்பாளர் தனசேகரன், கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியாவூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க பொருளாளர் சாதிக்பாட்ஷா வரவேற்றார்.

கூட்டத்தில் விக்கிரவாண்டி கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி மற்றும் மழை நீர் வடிகால் வாய்க்கால் பணி, மின்கம்பங்கள் மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகள் ஒப்பந்ததாரர் அலட்சிய போக்கால் கடந்த ஒரு ஆண்டாக மந்தமாக நடைபெறுவதை கண்டிப்பது, முறையான சாலை வசதி இல்லாததால் விபத்துக்கள் அடிக்கடி நேரிடுகிறது. எனவே இதை கண்டித்து வருகிற 3-ந்தேதி வர்த்தகர் சங்கம் சார்பில் அனைத்து கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, 5-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் வணிகர்கள் திரளாக பங்கேற்பது என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க துணைத்தலைவர்கள் மணிவண்ணன், அஷரப் உசேன், நிர்வாகிகள் சங்கர், சிவா, சந்தோஷ், குமாரகிருஷ்ணன், முருகவேல், சண்முகம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story