கடையின் பூட்டை உடைத்து திருட்டு


கடையின் பூட்டை உடைத்து திருட்டு
x

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் கோட்டைப்பட்டி விலக்கு மதுரை-திருச்சி நான்கு வழி சாலை ஓரத்தில் கார் பழுதுபார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கடை திறக்க வந்த பிரபு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 4 பேட்டரி, ஜாக்கி உள்ளிட்ட ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story