குண்டர் சட்டத்தில் கடைக்காரர் கைது


குண்டர் சட்டத்தில் கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கடைக்காரர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சில்மிஷம்

நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 58). அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுமி ஒருவர் மிட்டாய் வாங்குவதற்காக சென்றார். அப்போது சிறுமியிடம் மணிகண்டன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

குண்டர் சட்டம்

இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரீதருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மணிகண்டன் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் இருந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

தற்போது மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.


Next Story