கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்


கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2023 4:18 PM IST (Updated: 27 Feb 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலையில் இருந்து கரிதுகள்கள் வெளியேறுவதை கண்டித்து வாழவச்சனூரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

சர்க்கரை ஆலையில் இருந்து கரிதுகள்கள் வெளியேறுவதை கண்டித்து வாழவச்சனூரில் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரிதுகள்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து அதிகளவில் கரிதுகள்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டாக அறிவித்திருந்தனர்.

கடை அடைப்பு

இதனையடுத்து மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெறும் கடை அடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வாழவச்சனூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் கள்ளக்குறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story