புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை
ஓசூர் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் பஸ் நிலையம் அருகே இருந்த பழைய நகராட்சி அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கு மாநகராட்சி மூலதன மானிய நிதியில் ரூ.19.5 கோடி மதிப்பில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவுக்கு ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ரவி, பகுதி செயலாளர்கள் ஜி.ராமு, எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர்கள் மல்லிகா தேவராஜ், யசஷ்வினி மோகன், மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story