நீடாமங்கலத்தில் கடைகள் அடைப்பு
திருவாரூர் அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலையை தொடர்்ந்து நீடாமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
நீடாமங்கலம்;
திருவாரூர் அருகே வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலையை தொடர்்ந்து நீடாமங்கலத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
கொலை
திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளராக இருந்த நடேச. தமிழார்வன். கடந்த வருடம் நவம்பர் மாதம் 10 -ந் தேதி நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார்(வளரும் தமிழகம் கட்சி பிரமுகர்) மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அதன்பின் ராஜ்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் பூவனூர் ராஜ்குமார் திருவாரூர் அருகே நேற்று மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கடைகள் அடைப்பு
இதைத்தொடர்ந்து நேற்று நீடாமங்கலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. நேற்று மாலை ராஜ்குமாரின் தம்பி ராமமூர்த்தி மற்றும் ராஜ்குமார் குடும்பத்தினர் பூவனூர் மெயின்ரோட்டில் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் பூவனூரில் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதற்கிடையே நீடாமங்கலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.