கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது


கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பலத்த மழை பெய்ததால், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோத்தகிரி மார்க்கெட்டில் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மார்க்கெட் பகுதியில் குடிநீர் தொட்டிக்கு அருகே கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வழிந்தோட முடியாமல் 2 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது. இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் வியாபாரிகள் கால்வாய்க்குள் இறங்கி அங்கு சிக்கியிருந்த கல்லை அகற்றினர். நேற்று காலை மணியுடன் 24 மணி நேர நிலவரப்படி, கோத்தகிரியில் 62 மில்லி மீட்டர், கோடநாட்டில் 36 மில்லி மீட்டர் மழை பதிவானது.


Next Story