எர்ணாவூரில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை 50 ஆயிரம் திருட்டு


எர்ணாவூரில் அடுத்தடுத்து 5 கடைகளின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகை 50 ஆயிரம் திருட்டு
x

சென்னை எர்ணாவூரில் 5 கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு 15பவுன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி. சி. டி. வி கேமிராக்களை உடைத்து பூட்டி இருந்த வீட்டில் உள்ள செல்போன் கடை, மெடிக்கல் ஷாப், எலக்ட்ரானிக்ஸ் கடை பூட்டை உடைத்து பணம்செல்போன் கொள்ளை அடித்து சென்றுள்ளனர் .இன்று காலை வழக்கம் போல் நகை கடை உரிமையாளர் சந்தோஷ்காந்தி கடையை திறக்க வந்த போது கடையின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்த15பவுன் தங்க நகை மற்றும் 50ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story