ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி விஷ்வா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி  விஷ்வா என்கவுன்ட்டரில்  சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 16 Sept 2023 5:47 PM IST (Updated: 16 Sept 2023 6:49 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கி விட்டு, ரவுடி விஷ்வா தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பதூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில குற்ற வழக்குகளுக்காக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஷாவை தேடி வந்தனர். இந்த நிலையில், தான் விஷ்வா, சுங்குசார் சத்திரம் அருகே பதுங்கியிருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்துள்ளனர்.

அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இந்த என்கவுண்டரில் ரவுடி விஷ்வா சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி விஷ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


Next Story