கிராமசபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
கொல்லங்குப்பம் கிராமசபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொல்லகுப்பம் ஊராட்சியில் நேற்று மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் கிராமம் முழுவதும் பட்டியலின மக்கள் (எஸ்.சி) வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மலைவாழ்மக்கள் (எஸ்.டி) யாருமே வசிக்காத நிலையில் இதே கிராமத்தை சேர்ந்த 11 பேரின் பெயர்கள் ஆன்லைனில் (மலைவாழ்மக்கள்) எஸ்.டி. என்று வெளியாகி உள்ளது.
சலுகை பெற சிலர் இதுபோன்று சாதி சான்றிதழ்களை மாற்றியுள்ளார்கள். அதிகாரிகள் சான்றிதழ்களை எப்படி வழங்கினார்கள் என்று சரமாரியாக கேள்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கொல்லகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் மீனாவிடம் கேட்டபோது இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் யாரும் வசிக்கவில்லை. ஆனால் ஆன்லைனில் இதுபோன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.