கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்


கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
x

வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் பாதில் நிறுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த அலசந்தாபுரம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் பாதில் நிறுத்தப்பட்டது.

பொதுமக்கள் புகார்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அலசந்தாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வி.சரளா தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி மற்றும் பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கிராம மக்கள் சரமாரியாக புகார் கூறினர்.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளிகளுக்கு அட்டை வழங்கப்படவில்லை எனவும், கடந்த ஒரு ஆண்டாக ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை காண்பிக்க வில்லை, ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் நிர்வாகத்தில் தலையிட்டு, அனைத்து வேலைகளும் செய்கிறார் என்றும், இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், உரிய அதிகாரிகளுக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கூச்சல் குழப்பம்

இந்த ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர் கிராமத்திலேயே இருப்பதில்லை. இதனால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர் என புகார் கூறினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பாதியிலேயே கிராம சபை கூட்டம் நிறுத்தப்பட்டது.

இதேபோல் ஆலங்காயம் ஒன்றியம் 102 ரெட்டியூர் ஊராட்சி உள்பட பல இடங்களில் கிராம சபை கூட்டத்தில் உச்சம் குழப்பங்கள் ஏற்பட்டது.


Next Story