மழை வேண்டி கோலாட்டம்
கீழப்பாவூரில் மழை வேண்டி கோலாட்டம் நடந்தது
பாவூர்சத்திரம்:
ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்து அமாவாசை அன்று குளத்திலிருந்து களிமண் கொண்டு வந்து, பசு செய்து பசுவனுக்கு அலங்காரம் செய்வார்கள். தொடர்ந்து மழை வேண்டி விவசாயம் செழிப்பதற்காகவும், நாடு வளம் பெறுவதற்காகவும் கிராமத்து பெண்கள் கோலாட்டம் பண்டிகையை 2 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். கீழப்பாவூரிலும் இந்த நிகழ்ச்சி ராமபஜனை மடத்தில் நடந்தது. இதில் பெண்கள் கோலாட்டம், கும்மியடித்து சுவாமி நாமங்களை பாடி விழாவினை ஆனந்தமாக கொண்டாடினர். மேலும் சித்ரான்னம் சமைத்து, வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire