கத்தியை காட்டி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது
தூத்துக்குடியில் கத்தியை காட்டி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம், மேல அலங்காரத்தட்டை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சிவக்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் அந்த பகுதியில் சென்ற தொழிலாளி ஒருவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story