தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி


தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி
x
தினத்தந்தி 20 Jun 2023 1:15 AM IST (Updated: 20 Jun 2023 9:51 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடந்தது. இதையொட்டி, கிருஷ்ணகிரி சாந்தி நகரில் உள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் ஊர்வலமாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 2-வது மேடைக்கு கொண்டுவந்து, அங்கு நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை இசையாஸ் உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும், சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து ஆசீர்வாதத்தை வழங்கினார். இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story