குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்


குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்
x

இச்சிபுத்தூரில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்வாய் மற்றும் இச்சிபுத்தூர் ஆகிய கிராமங்களில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி, துணை செயலாளர் வினோத் காந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நெமிலி ஒன்றியக் குழு தலைவர் வடிவேல், அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர், அரக்கோணம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், நகர செயலாளர் வி.எல்.ஜோதி, இச்சிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story