அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி பகுதிகளில்  இன்று மின்சாரம் நிறுத்தம்
x

அதியமான் கோட்டை, நல்லம்பள்ளி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை துணை மின்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அதியமான்கோட்டை துணை மின்நிலையம் மூலம் மின்சார வினியோகம் பெறும் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், தோக்கம்பட்டி, ஸ்பின்னிங் மில், தேவரசம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story