நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்


நாமக்கல் மாவட்டத்தில்  இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
x

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எருமப்பட்டி, கபிலர்மலை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தொட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி மற்றும் காவக்காரப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

கபிலர்மலை துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்ன சோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

ராசிபுரம்

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, பட்டணம் முனியப்பன் பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்பட சுற்றுவட்டாரங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story