கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
x

தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக கூடங்குளம் 1-வது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 1,000 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 1-வது அணு உலையில் 1.000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை அந்த அணு உலையில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

1,000 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

இதனால் அந்த உணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த அணுஉலையில் பழுதை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் 2-வது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுதவிர மேலும் 4 அணுஉலைகள் கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story