முதியவருக்கு அரிவாள் வெட்டு


முதியவருக்கு அரிவாள் வெட்டு
x

உவரி அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உள்ள ராமன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்ற கணேசன் (வயது 70). இவருக்கு பூர்வீகமான இடத்தில் மகளுடன் வசித்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி மகன் நாகலிங்கம் என்ற பாக்கியராஜ் (35). இவர் சாத்தான்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று ராமன்குடி வந்த அவர், தனது பெரியப்பாவிடம் தனக்கு வீடு கட்ட இடம் தருமாறு கேட்டுள்ளார் அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கணேசனின் தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.


Next Story