விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x

திருப்பனந்தாள் அருேக விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருேக விவசாயியை அரிவாளால் வெட்டிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

அரிவாள் வெட்டு

திருப்பனந்தாள் அருகே உள்ள தத்துவாஞ்சேரி காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் அக்பர்அலி (வயது50). விவசாயி.இவரது சகோதரர் ரொஜப்தீன்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிதம்பரநாதபுரம் பழைய தெருவை சேர்ந்த லோகப்பனுக்கும் (52) முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சிதம்பரநாதபுரம் பகுதியில் உள்ள பயிரை பார்வையிடுவதற்காக நேற்று மாலை அக்பர் அலி சென்று கொண்டிருந்தார்.அப்போது லோகப்பன், அவரது மகன் அரவிந்தன், லோகப்பனின் தம்பி ஆனந்தராஜ் ஆகியோர் அக்பர்அலியை மறித்தனா். பின்னர் லோகப்பன் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஆகியோர் அக்பர்அலியை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆனந்தராஜ் அரிவாளால் அக்பர்அலியை வெட்டியதாக தெரிகிறது. இதில் அக்பர்அலி படுகாயமடைந்தார்.

கைது

அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜ்(48), அரவிந்த்(28) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான லோகப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story