சித்தர் குடில் தீயில் எரிந்து நாசம்


சித்தர் குடில் தீயில் எரிந்து நாசம்
x

சீர்காழி அருகே சித்தர் குடில் தீயில் எரிந்து நாசமடைந்தது

மயிலாடுதுறை

சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றங்கரையில் சந்திரசேகர் (வயது 60) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓலை கொட்டகையால் சித்தர் குடில் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி, பைரவர், சிவலிங்கம் ஆகிய சாமி சிலைகளை வைத்து தினமும் வழிபாடு செய்து வருகிறார். இந்த சித்தர் குடிலுக்கு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் இந்த சித்தர் குடிலில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகள் உருகி சேதமடைந்தது. மேலும் குடிலில் இருந்த பூஜை பொருட்கள், புத்தகங்கள், சிலைகள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story