திருவாடானை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை


திருவாடானை போலீஸ் நிலையத்தை   கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருப்பாலைக்குடி அருகே வாகவயல் கிராமத்தை சேர்ந்த சந்தியாகுவை (வயது 52) சம்பவத்தன்று மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பாலைக்குடி போலீசார் நைனார் கோவில் அருகே உள்ள நகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த நவில்(33), தினேஷ், சரவணன் உள்பட 4 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். போலீசாரின் பாதுகாப்பில் இருந்த நவில் பினாயிலை குடித்தார். அவரை ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் போலீசார் அவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். நேற்று காலை நவிலின் உறவினர்கள் மற்றும் நகரமங்கலம் கிராம மக்கள் திருவாடானை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் நிலையத்திற்குள் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுப்பு வேலி அமைத்து போலீசார் தடுத்தனர். போலீசார் போலீஸ் நிலையத்தின் கதவுகளையும் அடைத்தனர். பின்னர் நவிலின் தாய், தந்தை, மனைவி ஆகியோரை மட்டும் நவில் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். சி.கே. மங்களம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவில் உள்பட மற்றவர்களும் இருப்பதை அறிந்து கிராம மக்கள் அங்கு சென்றும் முற்றுகையிட்டனர். கைதானவர்களை விடுவிக்கக்கோரி அப்பகுதியிலேயே காத்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு பின்னர் கலைந்து சென்றனர்.


Next Story