கடலாடி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம்
கடலாடி ஒன்றிய அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
சாயல்குடி,
கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் உள்ள கிழக்கு குடியிருப்பு, வடக்கு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கவில்லை என கூறி கிராம பொதுமக்கள் காலி குடங்களுடன் கடலாடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பாண்டி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன், சத்துணவு மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் அப்பகுதியில் நடைபெற்று வருவதாகவும், நாளையுடன் பணிகள் முடிவடையும், ஓரிரு நாளில் குடிநீர் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story