ஊட்டியில் ஆசிரியர்களுக்கு சைகை ெமாழி பயிற்சி
ஊட்டியில் ஆசிரியர்களுக்கு சைகை ெமாழி பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி
ஊட்டி
நீலகிர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் தொடக்க நிலை, உயர் மற்றும் மேல்நிலையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு செய்கை மொழி குறித்து பயிற்சி ஊட்டி அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் அளிக்கப்பட்டது. இதில் 17 சிறப்பு பயிற்றுநர்கள், 4 இயன்முறை பயிற்றுநர்களுக்கு வழக்கமான பல்நோக்கு பயிற்சியுடன் சைகை மொழி பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் பங்கேற்பாளர்கள் மிக ஆர்வத்துடன் சைகை மொழியினை கற்றுகொண்டனர். இதன் மூலம் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இப்பயிற்சி அமைந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story