கரூரில் கம்பம் முழுவதும் ஒளிரும் சிக்னல் விளக்குகள்


கரூரில் கம்பம் முழுவதும் ஒளிரும் சிக்னல் விளக்குகள்
x

கரூரில் கம்பம் முழுவதும் ஒளிரும் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் வரவேற்று உள்ளனர்.

கரூர்

போக்குவரத்து சிக்னல்

கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதி எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருந்து வருகிறது. இந்த மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.இதில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டு, சிவப்பு, மஞ்சள், பச்சை நிற விளக்குகள் எரியும் போது சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மட்டும் ஒளிரும் வகையில் இருந்தது. இந்நிலையில் தற்போது மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் உள்ள சிக்னல்கள் நவீனமாக்கப்பட்டுள்ளது.

கம்பம் முழுவதும் சிக்னல்

இதில் சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல், அந்த சிக்னல் கம்பம் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார்போல் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தூரத்திலிருந்து பார்க்கும்போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது என வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் எளிதாக தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் சிக்னல் கம்பம் முழுவதும் சிவப்பாகவும், பச்சை நிற சிக்னல் விழுந்தால் பச்சை நிறமாகவும், மஞ்சள் நிற சிக்னல் விழுந்தால் மஞ்சள் நிறமாக கம்பம் முழுவதும் மாறும் வகையில் இடம்பெற்றுள்ளது. இது வாகன ஓட்டிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story