வியாபாரிகளிடம் கையெழுத்து இயக்கம்


வியாபாரிகளிடம் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு சார்பில் வியாபாரிகளிடம் கையெழுத்து இயக்கம் தேனியில் நடந்தது.

தேனி

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி தேனியில் பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு சார்பில் வியாபாரிகளிடம் கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராம் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நகரில் உள்ள வியாபாரி களிடம் இதுதொடர்பான கோரிக்கை மனுவில் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் வினோத்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலு, பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், நகர தலைவர் மதிவாணன், நகர துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story