கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி
தமிழக கவர்னர் ரவியை மாற்றக்கோரி ம.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாலமுரளி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதாநவாப், தி.மு.க. நகர செயலாளர் நவாப் உள்பட ஏராளமான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். மேலும் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு, கையெழுத்து படிவங்களை நகராட்சி தலைவர் பரிதா நவாப் மற்றும் மாவட்ட செயலாளர் பாலமுரளி ஆகியோர் வழங்கினார். இந்த கையெழுத்து இயக்கத்தில், மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் காவேரி, மாவட்ட துணை செயலாளர்கள் தருமன், அசோக்குமார்ராவ், சரஸ்வதி ஆறுமுகம், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story