போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்


போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்
x

போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.

திருச்சி

திருவெறும்பூர்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் போதை பழக்கத்திற்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நேற்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அந்த சங்கத்தின் திருவெறும்பூர் தாலுகா குழு சார்பாக திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதி பகுதிகளில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள், பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story