ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
தமிழக கவர்னரை நீக்கக்கோரி, பழனி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் பழனி ஆர்.எப்.ரோடு பெரியார் சிலை பகுதியில் நடந்தது.
தமிழக கவர்னரை நீக்கக்கோரி, பழனி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் பழனி ஆர்.எப்.ரோடு பெரியார் சிலை பகுதியில் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகர் முன்னிலை வகித்தார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கும், பண்பாட்டுக்கும் எதிராக செயல்பட்டு வருவதாகவும், அவரை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் ம.தி.மு.க. நிர்வாகிகள் பலர் மனுவில் கையெழுத்திட்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு கையெழுத்து போட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை குறித்து தெரிவித்து கையெழுத்து வாங்கினர். மேலும் கோரிக்கை நோட்டீசையும் பொதுமக்களிடம் வழங்கினர். இந்த மனுவை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.