அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி கையெழுத்து இயக்கம்
கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
திண்டுக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சாணார்பட்டி ஒன்றிய குழு சார்பில், கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி கையெழுத்து இயக்கம் கோபால்பட்டியில் நடந்தது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணன் முன்னிலை வகித்தார். சாணார்பட்டி ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் பாலகுரு, காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் ராஜ்கபூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா, பாப்பாத்தி, மாதர்சங்க ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிரூபன் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
Related Tags :
Next Story