குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கம்
கோத்தகிரியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கம் நடந்தது.
நீலகிரி
கோத்தகிரி,
குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்யவும் தொழிலாளர் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சைல்டு லைன் சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் கையெழுத்து இயக்கத்தை ெதாடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், பயணிகள், பள்ளி குழந்தைகள் பலர் கையெழுத்திட்டனர். தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Related Tags :
Next Story