தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி


தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி
x

தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சி தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவடட காவல்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க போலீஸ் சூப்பிரண்டு கே.கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆரணி, புதுப்பாளையம், எறையூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஜமுனாமரத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்புகலை பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தண்டராம்பட்டு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்மாணவிகளுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலை பயிற்சிகள் தொடங்க்பட்டன. அதில் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சவுந்தரராஜன் மேற்பார்வையில், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் கே.புனிதா தலைமையில் இந்த பயிற்சி நடக்கிறது.


Next Story