திருச்சி-விருதுநகர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேரமாற்றம்
திருச்சி-விருதுநகர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேரமாற்றப்பட்டது
செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து விருதுநகர், மானாமதுரை வழியாக சென்னைக்கு வாரம் 3 முறை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படுவதில், திருச்சி-விருதுநகர் இடையேயான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20681) திருச்சியில் இருந்து நள்ளிரவு 2 மணிக்கு பதிலாக 1.50 மணிக்கு புறப்படும். புதுக்கோட்டையில் இருந்து நள்ளிரவு 2.47 மணிக்கு பதிலாக 2.35 மணிக்கும், காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 3.20 மணிக்கு பதிலாக 3.10 மணிக்கும், தேவகோட்டையில் இருந்து நள்ளிரவு 3.27 மணிக்கு பதிலாக 3.17 மணிக்கும், சிவகங்கைக்கு நள்ளிரவு 3.54 மணிக்கு பதிலாக 3.44 மணிக்கும், மானாமதுரையில் இருந்து அதிகாலை 4.22 மணிக்கு பதிலாக 4.12 மணிக்கும், அருப்புக்கோட்டையில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு பதிலாக 4.55 மணிக்கும் புறப்படும். இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும்.