தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.
ராஜபாளையம்.
கருணாநிதியின் நினைவுதினத்தை முன்னிட்டு ராஜபாளையம் அருகே முகவூரில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து செட்டியார்பட்டி தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் மவுன ஊர்வலமாக சென்றனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜா அருண்மொழி, நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் மவுன ஊர்வலமாக சென்று கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி தலைவர்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மீனவர் அணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ், நகர, பேரூராட்சி துணைத்தலைவர்கள் கல்பனா, விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வேல்முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், பேரூர் செயலாளர்கள் இளங்கோ, சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.