தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.12¾ லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,338 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.776-க்கு விற்பனையானது. நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 1,883 கிலோவாக அதிகரித்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.738-க்கும், குறைந்தபட்சமாக ரூ.440-க்கும், சராசரியாக ரூ.679.59-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையாகின. மொத்தம் ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
Next Story