பட்டுக்கூடு வரத்து குறைந்தது


பட்டுக்கூடு வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைந்தது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 4,825 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏல அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது. அதன்படி விவசாயிகள் 1,753 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.740-க்கும், குறைந்தபட்சமாக ரூ.407-க்கும், சராசரியாக ரூ.644.03-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 29ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story