தேனியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு
வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேனியம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தேனியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து மாலை ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ரமேஷ் உள்ளிட்ட கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story