மோப்பநாய் சிமி இறந்தது


மோப்பநாய் சிமி இறந்தது
x

தமிழகத்தின் முதல் வனத்துறை மோப்பநாய் சிமி இறந்தது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வனப்பகுதியில் நடக்கும் குற்றங்களை தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வன அலுவலகத்துக்கு தமிழகத்திலேயே முதன் முதலாக மோப்பநாய் வழங்கப்பட்டது. அதற்கு சிமி என பெயர் வைத்து அழைத்தனர். இந்த மோப்பநாய்க்கு வயது 9. இது மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நாய் ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளில், கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு குற்ற வழக்குகளில் துப்புத்துலக்க உதவியாக இருந்தது. இந்த நாய்க்கு வயிற்றில் ஏற்பட்ட கட்டியால், கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து நெல்லை கால்நடை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த நாய் நேற்று இறந்தது. வனத்துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று நாயின் உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாகவும், இந்த நாய் தனது மோப்ப சக்தியால் வனப்பகுதிகளுக்குள் திறமையாக செயல்பட்டு வந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story