அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு - அமைச்சர் பொன்முடி


அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு - அமைச்சர் பொன்முடி
x

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்

சென்னை,

துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது ,

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.ஒரே தேர்வு , ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்.ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும்.;முதுகலை மாணவர்சேர்க்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

அரசை ஆலோசிக்காமல் கவர்னர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். கவர்னர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம்.

தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்.என தெரிவித்தார்.


Next Story