சிங்காரவேலவர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
சிக்கல்:
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா தினமும் நடைபெற்று வந்தது. நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிங்காரவேலவர், நவநீதேஸ்வரர், வேல் நெடுங்கன்னி அம்மன், ஆகியோருக்கு தனித்தனியாக யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சங்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.