கங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா


கங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா
x

ஒடுகத்தூரில் கங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

வேலூர்

ஒடுகத்தூரில் கங்கை அம்மன் கோவிலில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக 28-ந் தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தலும், 29-ந் தேதி பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி அளவில் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. தாரை தப்பட்டை முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டிக்கொண்டனர். தொடர்ந்து அம்மனுக்கு காசு மாலை, மலர்களை கொண்டு சிறப்பு செய்தனர். கோவிலுக்கு கொண்டுவரப்பட்ட அம்மன் சிரசு அங்கு ஊஞ்சலில் வைத்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மன் சிலை மீது சிரசு பொருத்தப்பட்டது. இதனை யடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story