சிறுத்தை விரைவில் பிடிபடும்


சிறுத்தை விரைவில் பிடிபடும்
x
திருப்பூர்


ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை விரைவில் பிடிபடும் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

ஆய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதியில் நடமாடும் சிறுத்ைதயை பிடிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் காங்கயம் ஆய்வு மாளிகையில் நடந்தது. தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் எஸ்.வினீத் முன்னிலை வகித்தார். கூட்டம் முடிந்த பின்னர் ஊதியூர் மலைப்பகுதியில் சிறுத்தை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர்.

அப்போது அமைச்சர் மா.மதிவேந்தன் கூறியதாவது:-

ஊதியூர் பகுதியில் கடந்த மார்ச் 3-ந் தேதி புகுந்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தியும், கால்நடைகளை தாக்குவதாகவும் தகவல் வந்தது. அதைெயாட்டி வனத்துறையினர் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகியது. மேலும் மார்ச் 14-ந் தேதி ஒரு கன்று குட்டியும், 15-ந் தேதி அன்று மேலும் ஒரு கன்றுக்குட்டியையும் சிறுத்தை தாக்கி விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியதில் கேமராக்களில் பதிவாகியுள்ளதை வைத்து 9 செ.மீ சுற்றளவு கொண்ட 6 முதல் 7 வயது உடைய சிறுத்தை என்பதை அறிய முடிந்தது.

விரைவில் பிடிக்கப்படும்

தொடர்ந்து 4 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. 2 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 22-ந் தேதி அன்று ஒரு நாயை தாக்கியது கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் 20 வனத்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதில் 10 வனச்சரகர்கள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் 3 பழங்குடி மக்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக அனைத்து முயற்சிகளும் வனத்துறையினர் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் கூண்டுகள் மற்றும் டிரோன்கள் என எண்ணற்ற கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக கூடிய விரைவில் சிறுத்தை பிடிக்கப்படும் அல்லது காட்டுப்பகுதிக்கு விரட்டி அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) ஜெயராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

========


Next Story