இணைப்பு சாலையை சீரமைக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
இணைப்பு சாலையை சீரமைக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
கருங்கல்:
கருங்கல் அருகே பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாலூரில் இருந்து வாழைத்தோட்டத்துக்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் ஊராட்சி நிர்வாகத்தினரால் தனிநபருக்கு அமைத்து கொடுத்த கழிவுநீர் ஓடை தொட்டி சேதமடைந்தது. இதையடுத்து அதை சீரமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தோண்டப்பட்டது. அதன் கழிவுகள் சாலையின் இருபுறமும் கொட்டப்பட்டன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நெல்லிக்காய்விளையை சேர்ந்த ரசல் (வயது63), சவுந்தர்ராஜன் (60) ஆகியோர் சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுளை அகற்றி சீரமைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலையை சீரமைக்கக்கோரியும் நேற்று ரசல், சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேரும் ஊராட்சி மன்ற அலுவலக வாசலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.