சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம்


சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம்
x

சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான குழுவினரால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து திருக்கல்யாண சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, பின்னர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண வைபவத்தில் எம்.எல்.ஏ.க்கள் வி.அமலுவிஜயன், வில்வநாதன், க.தேவராஜி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாபு, குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.விஜயராகவலு, ஊர் தர்மகர்த்தா டி.ஜி.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை டி.ஆர்.ஈஸ்வரரெட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமுடு உள்ளிட்ட விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.


Next Story