தண்டவாளத்துக்கு கீழ் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதால் தரைப்பாலம் அமைக்க கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதால் தரைப்பாலம் அமைக்க கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நாட்டறம்பள்ளி தாலுகா பச்சூர் ரெயில் நிலையம் அருகே கே.பந்தாரப்பள்ளி பகுதியில் அரசனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே கேட் (எண் 94) அமைந்துள்ளது. இந்த கேட் நிரந்தரமாக மூடப்படுவதால் அப்பகுதியில் வசித்து வரும் பாலன் வட்டம் பொது மக்களுக்கு மாற்று பாதை வழியாக கீழ் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.
இந்த நிலையில் தரைப்பாலம் அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் த.குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப், உதவி கோட்ட பொறியாளர் விக்ரம் கஹானோலியா, மற்றும் பெங்களூர் கோட்டம் ஊழியர்கள் மற்றும் பாலன் வட்டம் பகுதி பொது மக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.