சிறுமிைய கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை


சிறுமிைய கொன்ற சித்தப்பாவுக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை கொலை செய்த சித்தப்பாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிறுமியை கொலை செய்த சித்தப்பாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமி கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கார்த்திகைபட்டியை சேர்ந்தவர் ஈஸ்வர அய்யனார் (வயது 36). இவர் முன் விரோதம் காரணமாக தனது மனைவியின் சகோதரியான ஸ்ரீரங்கத்தை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை ஸ்ரீரங்கத்தின் மகள் மஞ்சுளா தேவி (17) தடுத்துள்ளார். இதையடுத்து ஈஸ்வர அய்யனார், மஞ்சுளாதேவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா தேவி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வர அய்யனாரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சிறுமியை வெட்டிக்கொன்ற ஈஸ்வர அய்யனாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story