ஆணி பலகையில் அமர்ந்து யோகா செய்த சிறுமி


ஆணி பலகையில் அமர்ந்து  யோகா செய்த சிறுமி
x

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆணி பலகையில் அமர்ந்து யோகா செய்த சிறுமி

தென்காசி

கடையம்:

கடையம் அருகே ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மதநல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி 8 வயது சிறுமி ஷாஜிதா ஸைனப் யோகா செய்தார். அவர் ஆணி பலகையில் அமர்ந்து தேசிய கொடியுடன், உடலில் தீபம் ஏந்தி யோகாசனம் மேற்கொண்டார்.

இதே ஊரை சேர்ந்த தொழிலாளி முகம்மது நஸீருதீன்-ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் இளையமகள் ஷாஜிதா ஸைனப். இவர் குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளி 4-ம் வகுப்பு மாணவி ஆவார்.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ரவணசமுத்திரம் ஊராட்சி தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி, சமுதாய தலைவர் பரமசிவன், வார்டு உறுப்பினர்கள் முகமது யஹ்யா, மொன்னா முகமது, ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சமூக ஆர்வலர் சேக் முகமது அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியர் குருகண்ணன் செய்திருந்தார்.


Next Story